
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உயிருடன் இல்லை என்று பத்திரிகையாளர் வஜாஹத் சயீத்கான் வெளியிட்ட தகவல் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, செப்டம்பர் 27-ம் தேதி சிறை நோக்கிய பேரணிக்கு ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கைபர் பக்துன்க்வா முதல்வர் சோஹைல் அப்ரிடி, இம்ரான் கான் விவகாரத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.