
23 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் வரும் 2027 ஏப்ரல் 3 முதல் 11 வரை நடைபெறவுள்ள 14-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய 3 நகரங்களில் மொத்தம் 28 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
கடந்த 2024 பிப்ரவரியில் இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் சென்று டேவிஸ் கோப்பை போட்டியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.