
ஜீவா நடிப்பில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள 'தகப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவடைந்து, டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரா. வெங்கட் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு மேலூர் மேலவளவு கருப்பு கோயிலில் படக்குழுவினர் கிடா வெட்டி பொதுமக்களுக்கு விருந்து அளித்தனர்.