
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சீசன் அக்டோபர் 3 முதல் 18 வரை முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய்) நடைபெற உள்ளது.
யுவராஜ் சிங், ஏபி டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர் உள்ளிட்ட முன்னணி முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் இந்தத் தொடரில், புதிதாக பங்களாதேஷ் சாம்பியன்ஸ் அணியும் இணைந்துள்ளது.
இதற்கு முந்தைய சீசன்களில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கோப்பையை வென்ற நிலையில், இந்த சீசன் மிகவும் பிரம்மாண்டமாக அமையும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.