
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் உதவி ஒளிப்பதிவாளர் நிவாஸின் குழந்தைக்கு 'ஜஸ்வந்த் ராம்சரண்' எனப் பெயரிட்டதை அறிந்த சிரஞ்சீவி, அவர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார்.
நிவாஸின் குடும்பத்தினரை திருச்சியிலிருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் வரவழைத்து, சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகியோர் அவர்களுடன் நேரம் செலவிட்டனர்.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை நிவாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, சிரஞ்சீவியின் தாராள மனப்பான்மையைப் பாராட்டியுள்ளார்.