
தமிழகத்தில் தகுதி பெற்ற இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக வரும் அக்டோபர் 10-ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
நகர்ப்புறம் மற்றும் பெருநகரங்களில் வாக்காளர் பட்டியல் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவை அக்டோபர் 7, 8 மற்றும் 9 தேதிகளில் பயன்படுத்தப்படும்.