
மாருதி ஆல்டோ கே10 கார் 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது, இது பெட்ரோல் மாடலில் லிட்டருக்கு 24.9 கி.மீ வரை மைலேஜ் வழங்குகிறது.
இந்த காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு சுமார் 33 கி.மீ மைலேஜ் தருவதாகவும், இதன் விலை சென்னையில் ரூ.4.55 லட்சம் முதல் ரூ.6.61 லட்சம் வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் தரநிலையாக வழங்கப்பட்டுள்ள இந்த காரில், 7 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உள்ளன.