
பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்தில் 8 முழ வேட்டிக்கு பதிலாக 4 முழ வேட்டி வழங்கும் முடிவுக்கு திமுக சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
4 முழ வேட்டிகளை வழங்கினால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஏற்கனவே 8 முழ வேட்டிகள் நெய்யப்பட்டு இருப்பில் உள்ளதாகவும் திமுக உறுப்பினர் ஆஸ்டின் வாதிட்டார்.
பெரும்பாலான மக்கள் 4 முழ வேட்டியையே விரும்புவதாகக் கூறிய அமைச்சர் விஜய் பாலாஜி, இருப்பில் உள்ள 8 முழ வேட்டிகளையும் அரசு கொள்முதல் செய்யும் என உறுதியளித்தார்.