
சூடானின் தெற்கு கார்டோபன் மாகாணத்தில் உள்ள டிபி மற்றும் லுவிரி கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.