
மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் நாளை முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில், 543 நாடாளுமன்ற இடங்கள் அப்படியே தொடர வேண்டும் என 19 எம்.பி.க்கள் பங்கேற்புடன் முடிவு எடுக்கப்பட்டது.
மறுவரையறையால் தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் எனக் கருதி, இந்தத் தீர்மானத்தை முதல்வர் விஜய் சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார்.