
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் எஹ்சான் ஜாபர் (22) என்பவர் தயாரித்த டிரைவர் இல்லா கார், சோதனை ஓட்டத்தின்போது போலீஸ் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில், இளைஞர் மீது போலீஸார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.