
வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பின் போது, தனது தாயார் மறைந்த செய்தியை அறிந்தும் ராதிகா சரத்குமார் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார்.
மீதமுள்ள 5 ஷாட்களை முடிக்காவிட்டால் மீண்டும் எடுக்க 2 மாதங்கள் ஆகும் என்பதால், தாயின் விருப்பப்படி ராதிகா படப்பிடிப்பில் பங்கேற்றதாகக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.