
திருகோணமலை கந்தளாய் குளத்தில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 4000 மீட்டர் நீளமான தடைசெய்யப்பட்ட நைலோன் வலைகளை பொலிஸார் கைப்பற்றினர்.
கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் லக்மால் விஜேரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைப்பற்றப்பட்ட வலைகள் இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.