
தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, இடைத்தேர்தல் முடிவுகள் தவெக அரசுக்கு கடிவாளமாக அமையும் என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், ஒரே நாளில் 8 கொலைகள் நடந்துள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வரும் 4-ம் தேதி தாராபுரம் பகுதிக்கு மீண்டும் வருகை தரும் முதல்வர் விஜய்க்கு கிராமம் கிராமமாகச் சென்றாலும் வாக்கு கிடைக்காது என்று அவர் தெரிவித்தார்.