
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு நடத்தினார்.
பருவமழை தொடங்குவதற்கு முன் நிறைவு பெறாத குடிநீர், கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சாலைப் பணிகளை உடனடியாக முடிக்குமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மின் மோட்டார்கள், ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் படகுகளை தயார் நிலையில் வைக்கவும், மின் கம்பிகளைச் சீரமைக்கவும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.