ஜப்பானின் குமாமோட்டா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் வணிக வளாகம் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்க மையம் குமாமோட்டோ நகருக்கு தெற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள நிலையில், 3,600 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளதால், 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு பேரிடர் மேலாண்மை முகமை அறிவுறுத்தியுள்ளது.