சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு பயிர்க்கடனை சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், மற்றவர்களுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.