
காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1,354 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது வரை 3,075 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
காங்கோ மட்டுமின்றி உகாண்டா போன்ற அண்டை நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளில் திணறி வருகிறது.