
பெண்களுக்கான கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நடப்பு சாம்பியன் அணியான பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணிக்காக இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏற்கனவே 4 இந்திய வீராங்கனைகள் விளையாடி வரும் நிலையில், இவர் 5-வது வீராங்கனையாக கரீபியன் பிரீமியர் லீக்கில் இணைந்துள்ளார்.
ஹர்லீன் தியோல் இதுவரை 28 டி20 போட்டிகளில் விளையாடி 311 ரன்கள் அடித்துள்ளார்.