
ரஷ்யாவில் உள்ள இர்குட்ஸ்க் பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய 28 வயதான தாரியா ஷிபிலோவா நிமோனியா நோய்த்தொற்றால் உயிரிழந்தார்.
உயிரிழந்தவருடன் தொடர்பிலிருந்த 200 நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அனைவருக்கும் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன.
இது ஆய்வக விபத்தே தவிர பொதுமக்கள் மத்தியில் பரவும் கொள்ளை நோய் அல்ல என்று ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.