
ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராய்ப்பூரில் தொடங்குகிறது.
இருதரப்பு டி20 தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல்முறையாகும்.
புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் அணி இந்தத் தொடரில் களமிறங்குகிறது.