
கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் இருந்து ஏமனை நோக்கி 305 பேருடன் சென்ற புலம்பெயர்ந்தோர் கப்பல் நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15 குழந்தைகள் உட்பட 109 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக சர்வதேச புலம்பெயர்வோருக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 52 ஆண்களும், 42 பெண்களும், 15 குழந்தைகளும் அடங்குவர்.