
தென்கொரியாவில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளதால், அந்நாட்டு பட்டதாரிகள் ஜப்பானிய நிறுவனங்களில் வேலை தேடி பெருமளவில் குடியேறி வருகின்றனர்.
ஜப்பானில் நிலவும் தீவிர தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட, சியோல் நகரில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி ஜப்பானிய நிறுவனங்கள் பணியாளர்களைத் தேர்வு செய்கின்றன.
தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் சேவைத்துறைகளில் முன்னனுபவம் இல்லாத புதிய பட்டதாரிகளுக்கும் முழுமையான பயிற்சி அளித்து பணியமர்த்த ஜப்பான் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.