/polimer-news/media/media_files/2026/10/16/8-2026-10-16-14-55-28.jpg)
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் பாம்புக் கடி உள்ளிட்டவற்றுக்கான சிகிச்சை மருந்துகள், டெங்கு, மலேரியா நோய்களுக்கான பிரத்யேக வார்டுகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகங்களில் மழை நீர் தேங்காமலும், மின் தட்டுப்பாடு ஏற்படாமலும் இருக்க முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.