
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் பெண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
போட்டியின் 44ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இஷிகா முதல் கோல் அடித்த நிலையில், 48ஆவது நிமிடத்தில் கேப்டன் சலிமா இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
கடைசியாக கடந்த 1982ஆம் ஆண்டு தில்லி ஆசியப் போட்டியில் தங்கம் வென்றிருந்த இந்திய பெண்கள் அணி, தற்போது 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கம் வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.