/nakkheeran/media/media_files/2026/10/04/dharapuram-admk-ds-2026-10-04-07-37-23.jpg)
இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமாரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கோவை அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையில் ரூ.70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அது செல்வகுமாருக்குச் சொந்தமானது எனப் பிடிபட்டவர்கள் தெரிவித்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல் நிலையத்திற்கு வெளியே அதிமுகவினரின் போராட்டம் மற்றும் பரபரப்புக்குப் பிறகு, மாவட்டச் செயலாளர் செல்வகுமாரை போலீசார் விடுவித்தனர்.