
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் வீட்டிற்குள் புகுந்த கரடி, சமையலறையில் இருந்த அடுப்பைத் தட்டிவிட்டதில் ஏற்பட்ட தீ விபத்தால் வீடு முழுவதும் புகை சூழ்ந்தது.
ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு நடந்த இந்த சம்பவத்தில், குடும்பத்தினரை மீட்க வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆக்ரோஷமாக இருந்த கரடியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
கரடி வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்து, குளிர்சாதனப் பெட்டி மற்றும் மர அலமாரிகளைச் சேதப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.