
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முறையே 103 மற்றும் 194 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டத்தில், தொடரை முழுமையாக வெல்ல இங்கிலாந்தும், ஆறுதல் வெற்றி பெற பாகிஸ்தானும் தீவிரமாகப் போராட உள்ளன.