
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டினில் இருந்து பஹாமாஸ் நோக்கிச் சென்ற தனியாருக்கு சொந்தமான 'லியர்ஜெட் 60' ரக சிறிய ஜெட் விமானம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து நிமிடத்துக்கு 10,000 முதல் 20,000 அடி வரை கீழ்நோக்கி இறங்குவதாக விமானி விமான போக்குவரத்து கட்டளை மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.