
கொசோவோ நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, பிரதமர் குர்தி மீது அலையன்ஸ் கட்சி பெண் எம்.பி. டைம் காத்ரிஜாஜ் முட்டைகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளைத் தொடர்ந்து அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அந்த எம்.பி.யை வெளியேற்றிய நிலையில், அவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.