
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் இறுதி சடங்கு மையத்தில் முறையான பராமரிப்பின்றி 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
துர்நாற்றம் வீசுவதாக மக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், குளிர்சாதன வசதி இல்லாதது உறுதி செய்யப்பட்டு உரிமையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால், ஆவணங்களைச் சரிபார்த்து சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.