
நேபாளத்தின் லோமன்தாங் பகுதியை மையமாகக் கொண்டு நேற்று இரவு 9:38 மணிக்கு ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 143 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.