
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற ஜி20 நிதி அமைச்சர்கள் மாநாட்டில், ரஷ்ய நிதியமைச்சர் ஆன்டன் சிலுவானோவ் பங்கேற்றதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உக்ரைன் போர் தொடங்கிய 2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா பங்கேற்காத நிலையில், இந்த முறை அமெரிக்கா அனுமதி அளித்ததால் போலந்து மற்றும் ஜெர்மனி அமைச்சர்கள் அதிருப்தி அடைந்தனர்.
ரஷ்ய அமைச்சருடன் குழு புகைப்படம் எடுக்க ஐரோப்பிய அமைச்சர்கள் மறுத்ததோடு, ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்திலும் ஜெர்மனி நிதியமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.