விண்வெளி குப்பைகளைக் கண்காணித்து விண்கலன்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சீனா தனது முதல் வணிக ரீதியிலான 'கண்டே' செயற்கைக்கோள் நெட்வொர்க் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
2030-ஆம் ஆண்டிற்குள் 120 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் செயற்கைக்கோள் 'லிஜியான்-1' ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட இந்த செயற்கைக்கோள்கள், தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் தலையீடு இன்றி தானாகவே வட்டப்பாதையை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை.