
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதிக்குள் விருப்பமனு அளிக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் மும்முனைப் போட்டியில் ஈடுபட உள்ள நிலையில், தவெக அரசு தனது 120 நாள் செயல்பாடுகளை முன்னிறுத்தியும், அதிமுக நீதி கேட்டும் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளன.