
நெதர்லாந்து மத்திய வங்கி, உலக அரசியல் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த தனது 313 டன் தங்கத்தில் 86 டன் தங்கத்தை லண்டனுக்கு மாற்றியுள்ளது.
நெருக்கடியான காலங்களில் தங்கத்தை விரைவாக வர்த்தகம் செய்ய வசதியாக, உலகின் முக்கிய வர்த்தக மையமான லண்டன் வங்கிக்கு இந்தத் தங்கம் மாற்றப்பட்டுள்ளதாக வங்கி ஆளுநர் ஓலாஃப் ஸ்லெய்பென் தெரிவித்தார்.
இங்கிலாந்து வங்கியின் பெட்டகத்தில் தற்போது 200 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமான மதிப்புடைய சுமார் 4,00,000 தங்கக் கட்டிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.