
மின்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக மின்வாரியம் 4வது குறுகிய கால டெண்டரை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் வரும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 4,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பரில் 1,400 மெகாவாட், டிசம்பரில் 700 மெகாவாட் மற்றும் ஜனவரியில் 2,800 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.