
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கிகவிட் நகரில் இருந்து தலைநகர் கின்ஷாசாவுக்குச் சென்ற ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மன்சொ என்ற பகுதியில் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ராணுவ அதிகாரிகள் உள்பட 17 பேரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.