
மேகமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வனப்பகுதியில் 4,600 குடும்பங்கள் வசிப்பதாகவும், அவர்களை அப்புறப்படுத்த 3 மாத அவகாசம் தேவைப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு கட்டடங்களின் மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளைத் துண்டிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இது குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 8-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.