
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.2,31,290 கோடியாக அதிகரித்துள்ளது.
இது 2017-ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பதிவான இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூலாகும்.
பண்டிகைக் கால விற்பனை அதிகரித்ததன் காரணமாகவும், இறக்குமதி சார்ந்த ஜிஎஸ்டி வசூல் 42.2% உயர்ந்த காரணத்தினாலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.