
தீவிர பட்டினி விரதம் இருந்தால்தான் இயேசுவை காண முடியும் என மக்களை மூளைச்சலவை செய்த கென்ய மத போதகர் பால் மெக்கன்சிக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இவரது பண்ணையில் கடந்த 2023-ல் நடத்தப்பட்ட சோதனையில் 190 குழந்தைகள் உட்பட 400 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மொம்பாசா நீதிமன்றம் நடத்திய விசாரணையில் 191 பேரின் மரணத்திற்கு மெக்கன்சி மற்றும் அவரது கூட்டாளிகளே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.