
ஆப்பிரிக்க நாடான சாட்டில், குடிநீர் ஆதாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு வேறு இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிரெடா இனத்தைச் சேர்ந்த கால்நடை மேய்க்கும் தொழிலாளிக்கும் குக்கா சமூகத்தைச் சேர்ந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இந்த துப்பாக்கிச் சூடு வெடித்தது.
இச்சம்பவத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.