கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'பிக்காசோ' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் கவுதம் சிவராமன் இயக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார், ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார்.
பாரம்பரிய வேட்டி சட்டையில் பட்டாசுகளுக்கு நடுவே சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் அமர்ந்திருக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.