
ரஞ்சிக்கோப்பை தொடரில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்ஷ் துபே ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முதலில் பேட்டிங் செய்த மத்தியப் பிரதேச அணி 209 ரன்களுக்குச் சுருண்டதுடன், அதில் அதர்வ மஹாஜன் மட்டும் தனியாளாகப் போராடி 85 ரன்கள் எடுத்தார்.
ஹர்ஷ் துபே கடந்த 2024-25 ரஞ்சிக்கோப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக 69 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.