
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த ரஞ்சி கோப்பை 'டி' பிரிவு லீக் போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 97 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
முதல் இன்னிங்சில் ஹிமாச்சல பிரதேசம் 140 ரன்களுக்கும், மும்பை 528/8 (டிக்ளேர்) ரன்களும் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ஹிமாச்சல பிரதேசம் 291 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
மும்பை தரப்பில் மோஹித் அவஸ்தி 5 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஷாம்ஸ் முலானி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.