
விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்களின் விதிகளைப் பின்பற்றத் தவறிய ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட்டுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையின் காரணமாக அவர் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியிலும், தொடக்கப் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை இழக்கிறார்.
தனது தவறை ஒப்புக்கொண்டு தண்டனையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக 33 வயதான மேகன் ஷட் தெரிவித்துள்ளார்.