
47 ஆண்டுகளுக்குப் பிறகு, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.
2024 டிசம்பரில் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அகமது அல் ஷரா அதிபரானதைத் தொடர்ந்து இந்த முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த தீர்மானம் 45 நாட்கள் பரிசீலனைக்குப் பின் அமலுக்கு வந்ததால், சிரியா மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டுள்ளன.