
மந்திர அரசின் 30.48% மற்றும் எல்.ஐ.சியின் 30.24% பங்குகள் உட்பட ஐ.டி.பி.ஐ வங்கியின் 60.72 சதவீதப் பங்குகளை கனடா நிறுவனமான ஃபேர்ஃபாக்ஸ் வாங்குகிறது.
இந்த மொத்தப் பங்குகளின் மதிப்பு ரூ.52,878 கோடி ஆகும் என்றும், பங்குகளை விற்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூலோபாய மறுசீரமைப்பு மூலம் நிதிச் சேவைத் துறையில் புதிய மூலதனமும் அந்நிய நேரடி முதலீடும் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.