
இந்தியாவில் 2016 ஆகஸ்ட் 25-ல் அறிமுகமான யுபிஐ சேவை, 10 ஆண்டுகளில் 13,000 மடங்கு வளர்ச்சியை எட்டி சாதனை படைத்துள்ளது.
2016-17-ல் 1.78 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள், 2025-26-ல் 24,162 கோடியாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது தினமும் சராசரியாக 66 கோடி பரிவர்த்தனைகள் நடக்கும் யுபிஐ சேவை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.