
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை கோவளத்தில் இன்று தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான கவர்னர் கைலாஷ்நாதனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், முதல்வர் ரங்கசாமி இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய், கேரள முதல்வர் சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.